எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..! அமைதியாக நடவுங்கள் ஆழுங்கட்சியினருக்கு பிரதமர் அறிவுரை..

ஆசிரியர் - Editor I
எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..! அமைதியாக நடவுங்கள் ஆழுங்கட்சியினருக்கு பிரதமர் அறிவுரை..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு அவர்களுடைய பணியை செய்ய தொடங்கியிருக்கும் சீ.வி.விக்னேஷ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ்- சிங்கள மக்களிடையில் பிரிவினை உண்டாக்க நினைக்கிறார்கள். 

மேற்கண்டவாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆழுங்கட்சி கூட்டத்தில் கடும் சீற்றத்துடன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்போது மேலும் அவர் கூறியதாக கூறப்படுவதாவது, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களிலும் செயற்பட்டார்கள்.

தற்போதும் செயற்படுகின்றார்கள். அவர்களைத் திருத்தவே முடியாது. நல்லாட்சி அரசின் காலத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் இணைந்து சபையில் கலாட்டா பண்ணினார்கள். தற்போது அவர்கள் இருவருக்கும் சபையில் ஓய்வுகொடுத்துவிட்டு அவர்கள் பாணியில் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் 

செயற்படத் தொடங்கிவிட்டார்கள். சுயநிர்ணய உரிமை விடயத்தையும் போர்க்குற்ற விசாரணை விவகாரத்தையும் முன்னிலைப்படுத்தி இவர்கள் உரையாற்றுகின்றார்கள். சர்வதேசப் பொறிமுறைக்குள் எம்மைச் சிக்கவைப்பதுதான் இவர்களின் பிரதான நோக்கம். 

புலம்பெயர் புலிகள் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இவர்கள் செயற்படுகின்றார்கள். இதற்கு விரைவில் முடிவு காணப்படும்.எனவே, சபையில் எமது அணி உறுப்பினர்கள் அனைவரும் சபை விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியாக இருக்க வேண்டும். 

கட்சியின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும். அனைவருக்கும் சபையில் உரையாற்ற படிப்படியாகச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு