காதலியை கொலை செய்தவர் 2வது தடவையாக தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்..!
காதலியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட நபர் 2வது தடவையும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதன்போது, காயமடைந்த குறித்த சந்தேக நபர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையின் 18வது நோயாளர் அறையின் கழிப்பறையில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்தம் 22ம் திகதி தனது காதலியான 22 வயதுடைய யுவதியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்து, தானும் விசம் அருந்தி தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சித்து தப்பிய சந்தேக நபரே
இவ்வாறு மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.