நாம் ஒன்றுமே செய்யவில்லை என்பது பொய்.

ஆசிரியர் - Editor I
நாம் ஒன்றுமே செய்யவில்லை என்பது பொய்.

வடக்கு மாகாணத்தில் பொருளாதார மற்றும் அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் அவ்வாறு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கூறுவதனை ஏற்க முடியாது என முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு மாகாண சபையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் நேற்றைய சபை அமர்வின் போது வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வுடக்கு மாகாண சபையின் 117 ஆவது அமர்வு அவைத் தலைவர் சிவஞானம் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது. இதன் போது வட மாகாணத்திற்கான பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான திட்டமிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட உறுதியான திட்ட வரைபைத் தயாரித்தல் குறித்தான அறிக்கையை சபை உறுப்பினர் ஆர்.nஐயசேகரன் முதலமைச்சருக்குச் சமர்ப்பித்து அதனை சபை அமர்வில் பிரேரனையாகக் கொண்டு வருமாறு கோரியிருந்ததாகவும் ஆயினும் அவர் கோரிய பிரேரனை சபையில் கொண்டு வரப்படாமை குறித்து அவைத் தலைவரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு அவைத் தலைவர் பல்வேறு காரணங்களைக் கூறி குறிப்பாக இதற்கான நடவடிக்கைகள் முதலமைச்சர் மேற்கொண்டு வருவதால் இந்தப் பிரேரனை தேவையற்றது என்ற சாரப்பட கருத்துக்களை முன்வைத்திருந்தார். இதன் போது எதிர்கட்சித் தலைவர் அந்தப் பிரேரனையில் விசயங்கள் உள்ளது என்றும் அதனை நிராகரிப்பதாக அவருக்கு சொல்லவில்லை என்று அவர் கேட்பதில் நியாயம் உள்ளது தானே என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் முதலமைச்சர் இந்த விடயம் குறித்து தான் சிலவற்றைக் கூற விரும்புவதாகவும் குறிப்பிட்டு இதற்கான விளக்கங்களையும் அளித்தார். அதாவது குறித்த உறுப்பினரைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவருடைய அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்து அதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் அவரிடம் தாம் தெரியப்படுத்தியிருபபதாகவும் குறிப்பிட்டார்.

ஆயினும் மாகாண சபை இவ்வாறான விடயங்களைச் செய்யதாதனாலேயே nஐயசேகரம் இதனை பிரேரனையுடாக கொண்டு வர முற்பட்டிருக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கூறியிருந்த நிலையில் அவ்வாறு மாகாண சபை எதுவும் செய்யவில்லை என்று கூற முடியாது என்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் ரீதியாக பல நடவடிக்கைகளை மாகாண சபை மேற்கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். 

இவ்வாறு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் மாறி மாறி செய்தோம் என்றோம் செய்யவில்லை என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதன் போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் குருகுலராசா மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஐந்த வருடங்கள் முடியப் போகின்றது என்றும் மாகாண சபையிடம் முழமையான திட்டங்கள் இருக்கிறதா என்றும் கேள்வியெழுப்பினார்.

இதற்கு குறுக்கிட்ட சிவாஐpலிங்கம் கடந்த இரண்டரை வருடங்களாக அமைச்சராக இருந்த போது குருகுலராசாவிற்கு தெரியாதது இப்ப அமைச்சராக இல்லாத போது தெரிகிறதா என்று கேள்வியெழுப்பினார். இவ்வாறு பல கருத்தக்கள் மாறி மாறி தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் மாகாண சபையின் தனித்துவத்தை யாரும் சீர்குலைக்க இடமளிக்க முடியாதென்றும் இவை எல்லாம் குறித்து சகலரையும் இணைத்த கலந்துரையாடலொன்றை நடாத்த எற்பாடு செய்வதாக கூறி இந்த விடயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் அவைத் தலைவர் சிவஞானம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு