பிணையில் விடுதலையானர் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்.

கடற்படைமுகாமிற்காக மக்களின் காணி சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தி யதற்காக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுத லை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22ம் திகதி வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படைமுகாமிற்கா க மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய முயற்சி க்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து காணி உரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளான மாகாணசபை உறுப்பி னர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோர் பங்கு பற்றியிருந் தார்கள்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக செயற்பட்டார்கள் எனவும், அரச அதிகாரிகள் தமது கடமையை செய்ய தடையாக இருந்தார்கள் எனவும், அரச சொத்துக்களை சேதப்படு த்தினார்கள் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டு,
முல்லைத்தீவு பொலிஸார் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்று ம் து.ரவிகரன் அகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தனர். இதற்கமை ரவிகரன் இன்று காலை 8 மணிக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானார்.
இதனையடுத்து ரவிகரன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன் றில் ஆஜர் செய்யப்பட்டார். அங்கு ரவிகரனுக்கு ஆதரவாக 9 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகினார்கள்.
இதனையடுத்து வழக்கை ஏப்ரல் மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி தலா 2 லட்ச ம் ரூபாய் பெறுமதியான 2 ஆள் பிணையில் ரவிகரன் வெளியில் செல்ல நீதிபதி அனும தித்துள்ளார்.