மாலியில் வெடித்தது இராணுவ புரட்சி!! -ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் சிறைபிடிப்பு-
மாலியில் அரசு நிர்வாகத்தை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களை கைது செய்ததையடுத்து, ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாலி நாட்டில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. இராணுவ கிளர்ச்சியாளர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றனர்.
இராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வருகின்றன. அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், பிரதமர் பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து தலைநகர் பமாகோ அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனால் மாலியில் பதற்றமான சூழல் நிலையை அடுத்து தனது பதவியினை ஜனாதிபதி இராஜினாமா செய்துள்ளார்.