கொரோனாவில் இருந்து மீண்டார் பிரேசில் அதிபரின் மனைவி
பிரேசில் அதிபரின் மனைவி மிச்செல் போல்சனாரோ கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டார்.
கொரோனாவால் பீடிக்கப்பட்டுள்ள உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனாரோ கடந்த மாதம் 7 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். அவர் 27 ஆம் திகதி குணமடைந்த அடுத்த சில நாட்களிலேயே அவரது மனைவி மிச்செல் போல்சனாரோவுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் இப்போது கொரோனா வைரசிடமிருந்து மீண்டு வந்து விட்டதாக மிச்செல் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.