மீண்டும் கொரோனா: நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு!!
நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து எதிர்வரும் செப்.19 ஆம் திகதி நடைபெற இருந்த பொதுத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கடந்த 102 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான ஆக்லந்தில் 49 பேருக்கு தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பொதுதேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 4 வாரங்களுக்கு அதாவது வரும் அக்டோபர் 17 ஆம் திகதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.