SuperTopAds

மனைவியை காக்க சுறாவை கொண்ற துணிச்சல் கணவர்!!

ஆசிரியர் - Editor III
மனைவியை காக்க சுறாவை கொண்ற துணிச்சல் கணவர்!!

கடற்கரையில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்த மனைவியை தாக்கிய சுறாவை தாக்கி மனைவியை உயிரை மீட்ட கணவரை பலரும் பாராட்டிவருகின்றனர். 

ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி என்ற கடற்கரையில் 35 வயதான சாண்டெல்லே டாய்ல், செல்லி தம்பதியினர் பொழுது போக்கிற்காக கடற்கரையில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தனர். 

இதன் போது கடற்கரையோரமாக கால் நனைப்பதற்கும் அவர்கள் முற்பட்டுள்ளனர். இந்நிலையில் கடலில் இருந்து கரை நோக்கி மிக வேகமாக வந்த 2 முதல் 3 மீட்டர் அளவுள்ள சுறாவால் அவர்கள் தாக்கப்பட்டார். 

சுறவால் தாக்கப்பட்ட மனைவி அலறினார். உடனடியாக டாய்லின் கணவர் சுறா மீது குதித்து அதனை குத்தி மனைவி டாய்லை மீட்டார்.

காயமடைந்த மனைவியை கணவர் வைத்தியசாலைக்கு கொண்டு விரைந்துள்ளார். அங்கு அவருக்கு வைத்தியர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது,

துணிச்சலாக ஆபத்தான சுறாவைத் தாக்கி மனைவியை மீட்ட கணவரை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.