தமிழகத்தை சேர்ந்த பெண் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்!!

ஆசிரியர் - Editor III
தமிழகத்தை சேர்ந்த பெண் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்!!

அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் கமலா ஹாரிஸ் என்பவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலுடன் சேர்ந்து துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் நடக்க இருக்கிறது. அதன்படி குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது யார் என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணை தேர்வு செய்வேன் என ஜோ பிடன் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். அதே போல் அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தனது வாக்குறுதி மற்றும் கட்சியினரின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், கருப்பின பெண்ணுமான கமலா ஹாரிசை துணை ஜனாதிபதி பதவிக்கு ஜோ பிடன் தேர்வு செய்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு