கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ்..! அங்கஜனுக்கு ஆறுதல் பரிசு ஒருங்கிணைப்புகுழு தலைவர்..
புதிய அரசாங்கத்தின் 28 அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று தலதாமாளிகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது அமைச்சரவை அந்தஸ்த்துள்ள கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலமைப்பதவியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி சார்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதனுக்கு யாழ்.மாவட்ட அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலமை பதவியே வழங்கப்பட்டிருக்கின்றது. அங்கஜன் இராமநாதனுக்கு அமைச்சு பதவி அல்லது பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படும்.
என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவருக்கான அமைச்சு பதவி நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. அங்கஜன் இராமநாதனுக்கு மட்டுமல்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, சுசில் பிறேம ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா,
ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விஜேதாஸ ராஜபக்ச, மஹிந்த சமரசிங்க, எஸ்.பி.திஸாநாயக்க உள்ளிட்ட பலருக்கு அமைச்சு பதவிகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.