15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி அடுத்த சில மாதங்களில் காத்திருக்கிறது..!
அடுத்த சில மாதங்களில் 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டு மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்படவுள்ளதாக கல்வியமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா மற்றும் பொதுத்தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த நியமனத்தில் தற்பொழுது முதற்கட்டமாக க.பொ.த சாதாரண தரத்திற்கான கணிதம், விஞ்ஞானம் மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான ஆசிரிய நியமனங்களும் வழங்கப்படும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான விபரங்கள் பாடசாலை அதிபர்கள் மூலம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் சுமார் 5000 ஆசிரியர்களுக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமனம் வழங்கப்படும்.
மேலும் ஆசிரியர்கள் அதிகமுள்ள பாடசாலைகளிலிருந்து வெற்றிடமுள்ள பாடசாலகளுக்கு அவர்களை அனுப்பும் திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.மற்றும் ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளதாகவும்,
இதற்கு ஆசிரியர் மற்றும் கல்வி டிப்ளோமாவை கட்டாயம் முடித்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.