SuperTopAds

பெருமெடுப்பில் மத்திய கல்லுாரிக்குள் நுழைந்த சுமந்திரனுக்கு கடும் எதிர்ப்பு..! அதிரடிப்படை கண்மூடித்தனமான தாக்குதல், பின் வாயிலால் வெளியேறினார்..

ஆசிரியர் - Editor I

யாழ்.தேர்தல் மாவட்டத்தின் பிரதான வாக்கெண்ணும் நிலையமான யாழ்.மத்திய கல்லுாரிக்குள் பெருமெடுப்பில் நுழைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக பலத்த கோஷங்கள் எழுப்பபட்டு, எதிர்ப்பு காட்டப்பட்ட நிலையில் அதிரடிப்படையினர் அங்கு எதிர்ப்பு காட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தோற்றுவிட்டார் என உத்தியோகப்பற்றற்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் சடுதியாக அவர் வென்றுவிட்டார் என்ற உத்தியோகபற்றற்ற செய்தியும் வெளியானது. இதனைடுத்து பெருமெடுப்பில் நுழைந்தார். இதன்போது வாக்கெண்ணும் நிலைய வளாகத்தில் இருந்த கட்சிகளின் 

ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் இணைந்து சுமந்திரனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், மிக முறைகேடாக அவர் தேர்தலில் வென்றார் என குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த எதிர்ப்பு வலுத்த நிலையில் சுமந்திரனின் பாதுகாப்பு பிரிவில் இருந்த விசேட அதிரடிப்படையினர் அங்குவந்து 

எதிர்ப்பு காட்டியோர் மீதும், எதுவும் செய்யாமல் நின்றவர்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எதிர்ப்பு காட்டியோர் தொடர்ந்தும் விடாப்பிடியாக நின்றதால் சுமந்திரன் வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் தொிவத்தாட்சி அலுவலரின் அலுவலகத்தின் 

பின் கதவால் அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் தப்பி சென்றார். இதன்போது அங்கும் கூடிய எதிர்ப்பாளர்கள் தரம் தாழ்ந்த வார்த்தை பிரயோகங்களால் சுமந்திரன் மீது வசைபாடினர். இதற்கிடையில் சித்தார்த்தன் 3ம் இடத்தில் இருந்தாகவும், அந்த இடத்திற்கு சுமந்திரன் வந்துவிட்டதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியான நிலையில், 

அதனாலும் மத்திய கல்லுாரி வளாகத்தில் சிறிது நேரம் குழப்பமான நிலை ஏற்பட்டது.