கிராமிய உழைப்பைச் சுரண்டும் கடன் திட்டங்களுக்கு எதிராக யாழ். நகரில் பேரணி!

ஆசிரியர் - Admin
கிராமிய உழைப்பைச் சுரண்டும் கடன் திட்டங்களுக்கு எதிராக யாழ். நகரில் பேரணி!

கிராமிய மக்களின் உழைப்பைச் சுரண்டும் அதிக வட்டியுடன் கூடிய கடன் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ். மாவட்ட கூட்டுறவாளர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கண்டனப் பேரணி இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக ஆரம்பித்த பேரணி, கண்டி வீதி ஊடாக யாழ். மாவட்ட செயலகத்தை அடைந்து நிறைவடைந்தது.

பேரணியின் நிறைவில் யாழ். மாவட்ட கூட்டுறவாளர் அமைப்பினரால், யாழ் மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

அதிகரித்துவரும் மக்களுடைய தேவைகளையும் அவற்றை இலகுவில் நிறைவேற்ற இயலாத நிலையைத் தோற்றுவித்துள்ள வேலையின்மை, போதிய ஊதியமின்மை, விலைவாசி உயர்வு ஆகிய பொருளாதார காரணிகளைப் பயன்படுத்தி மக்களுக்குள் ஊடுருவும் நுண் நிதிசார் எண்ணக்கருவானது உழைக்கும் மக்களைக் கடனாளிகளாக்குகின்றது. 

இதனால் உயிரை மாய்த்துக்கொள்ளுதல், உறவுகளுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் வன்முறைகள் அதிகரிக்கின்றன. கட்டுப்பாடுகள் வரையறைகள் அற்ற மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கும் நுண்கடன் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகவும் இத்தகைய கடன் வழங்கும் திட்டங்களை மக்களுக்குப் பாதிப்பற்ற வகையில் கூட்டுறவு அமைப்புகளுடாக மேற்கொள்ள வலியுறுத்தியும் இப் போராட்டம் இடம்பெற்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு