கடற்படைக்கு காணிகளை வழங்க நாம் தயாராக இல்லை.

கடற்படைக்கு காணியை வழங்க நாங்கள் தயாராக இல்லாதபோதும் எங்களிடமிருந்து அடாதாக காணியை பறித்து கடற்படைக்கு வழங்க மறைமுகமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள் அந்த நடவடிக்கைக்கு ஒத்தாசை புரிகிறார்கள். என கோட்டபாய கடற்படை முகாம் காணி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலக கேட்போ ர் கூடத்தில் நேற்று நடைபெற்றிருந்தது. இதன்போது முள்ளிவாய்க்கால் கோட்டபாய க டற்படைமுகாம் சுவீகரிப்பப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ம் திகதி காணி உரிமை யாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது 26ம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
பேசி தீர்மானிப்பது என எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய நேற் று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்படி விடயம் பேசப்படும்பே hதே மக்கள் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன்போது மக்கள் மேலும் கூ றுகையில் கடற்படைக்கு எங்கள் காணிகளை வழங்க நாங்கள் தயாராக இல்லை.
இந்நிலையில் எங்களுடைய காணிகளை அளவீடு செய்து சுவீகரிப்பதற்கு பல தடவைகள் மு யற்சிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியபோது அளவீடு n சய்யமாட்டோம், காணியை சுவீகரிக்க மாட்டோம். என கூறுபவர்கள் மறைமுகமாக கா ணியை சுவீகரித்து கடற்படைக்கு வழங்க முயற்சிக்கிறார்கள். இதற்கு அரச அதிகாரிகள் சிலரும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.
என குற்றஞ்சாட்டினர். தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில், கோட்டபாய கடற்படைமுகாம் அமைந்திருக்கும் காணி தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி. அந்த கா ணியை கடற்படைக்கு வழங்க மக்களும் விரும்பவில்லை. நாங்களும் விரும்பவில்லை.
அங்கே கடற்படை மக்களின் நிலங்களை மட்டும் அபகரிக்கவில்லை. நந்திக்கடல் என்ற பெ ரும் வளத்தையே கடற்படை சூறையாடிக் கொண்டிருக்கின்றது. எனவே மேற்படி காணி பிரச்சினைக்கு சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி பாரியளவிலான மக்கள் போராட்டத்தை நடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்படுவது நிச்சயம் என கூறினார்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் கூறு கையில், இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து சரியான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற் காக குழு ஒன்றை நியமிக்கவேண்டும் என கூறினார். இதற்கமைய காணி உரிமையாளர் களின் பிரதிநிதிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இணைந்து குழு ஒன்றை நியமிக்கவேண்டும் என கூறினார்.
இதற்கமைய காணி உரிமையாளர்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்க ள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந் த குழு மத்திய பாதுகாப்பு அமைச்சுடன் பேசி முள்ளிவாய்க்கால் கோட்டபாய கடற்படைமுகாம் அமைந்துள்ள காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் எனவும், அதுவரை யில் மேற்படி காணியை சுவீகரிக்கவோ,
சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யவோ முடியாது என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. மே லும் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படுவகையில் கூட்டத்தில் இருந்த கடற்படையினர் இந்த சுவீகரிப்புக்கான அளவீட்டு நடவடிக்கைக்கும் தமக்கும் தொடர்பில்லை. எனவும் மேலிடத்தின் உத்தரவின் பெயரிலேயே காணி அளவீடு செய்யப்படுவதாகவும் கூறியிருக்கி ன்றார்கள்.