24 மணி நேரத்தில் 4 கோர விபத்து..! 4 பேர் பலி. இலங்கையை அச்சுறுத்தும் வீதி விபத்துக்கள்..
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் 4 பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
பொரளை, ஹங்வெல, பன்னலை, சபுஸ்கந்த ஆகிய பகுதிகளிலேயே இந்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது.
பொரளை பகுதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, ஹங்வெல்ல அட்டிகல மீகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று
வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததுடன் எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பதுளையை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பன்னலை குளியாப்பிட்டி வீதியின் யக்பில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. யக்பில பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார்.
இதேவேளை, சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார்சைக்கிள் ஒன்று கொள்கலனொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.