ஜனாதிபதியின் தீர்மானம் கொண்டாடப்படவேண்டிய ஒன்று..! பவதாரணி ராஜசிங்கம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் உள்ள முன்பள்ளிகளை அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் கொண்டாடப்படவேண்டிய ஒன்று.

என தேசிய முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஒருங்கிணைப்பாளர் பவதாரணி ராஜசிங்கம் கூறியுள்ளார். 

முன்பள்ளிகளை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

முன்பள்ளி முறைமை அமைச்சின் கீழ் வைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாத சம்பளத்தை வழங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. 

நாட்டில் முன்பள்ளிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதிய அரசு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து முன்பள்ளி முறைமை அமைச்சின் கீழ் வைக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த முறையானது சகல பிரதேசத்திலுள்ள மாணவர்களும் ஒரேவகையான கற்றலை பெற்றுக்கொடுப்பதுடன் முன்பள்ளி ஆசிரியர் நலன் சார்ந்ததாகவும் அமைந்துள்ளது. 

எனது சிந்தனைப் பயணம் நேர்த்தியாய் நகர்வது நிறைவைத் தருகின்றது எனத தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு