அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஜனாதிபதியாவார்!! -கருத்துகணிப்பில் தகவல்-
அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு டிரம்ப் தெரிவு செய்யப்படுவார் என்று கருத்துகணிப்புகளில் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள்.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.