SuperTopAds

9 வயது சிறுமிக்கு 9 மணித்தியாலங்கள் நடந்த சத்திர சிகிச்சை..! 1வது முயற்சியே வெற்றி சுகாதார அமைச்சு பெருமிதம்..

ஆசிரியர் - Editor I
9 வயது சிறுமிக்கு 9 மணித்தியாலங்கள் நடந்த சத்திர சிகிச்சை..! 1வது முயற்சியே வெற்றி சுகாதார அமைச்சு பெருமிதம்..

இலங்கையில் முதல் தடவையாக சிறுவர்களுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கின்றது. 

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் சேவைபுரியும் வைத்திய நிபுணர் குழுவின் பங்களிப்புடன் குறித்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிருள்ள நன்கொடையாளர் ஒருவரின் கல்லீரலின் ஒரு பகுதி சிரோசிஸ் நோயாள் பீடிக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளவதற்காக சுமார் 9 மணித்தியாலங்கள் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.