SuperTopAds

வலுப்பெறும் அமெரிக்க சீனா முறுகல்!! -50 வருட வர்த்தக கொள்கை கைவிடப்பட்டது-

ஆசிரியர் - Editor III
வலுப்பெறும் அமெரிக்க சீனா முறுகல்!! -50 வருட வர்த்தக கொள்கை கைவிடப்பட்டது-

அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையில் தற்போது எழுந்துள்ள முறுகல் நிலையை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டு கால வர்த்தக கொள்கை முடிவுக்கு வந்துள்ளது. 

அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சாட்டியுள்ளது. 

ஹ_ஸ்டனில் இருந்த துணைத் தூதரகம்தான் அமெரிக்காவின் அறிவுசார் திருட்டில் ஈடுபட்ட மையமாக இருந்ததாகவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 50 வருடங்களாக ஜனநாயக ரீதியான நிர்வாகமுறைகளில் சீனாவுக்கான வாசல்களை அமெரிக்கா திறந்து வைத்தது

அந்நாட்டுடன் வர்த்தகம் நடத்தப்பட்டது. பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இருநாடுகளும் பங்கேற்றன. ஆனால் இத்தகைய அமெரிக்க அரசின் கொள்கையில்  மாறுதல் ஏற்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் நம்பகத்தன்மையற்ற சரிபார்க்க வேண்டிய புதிய கொள்கை வகுக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.