வெகு சிறப்பாக நடைபெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சபம்.

ஆசிரியர் - Editor I
வெகு சிறப்பாக நடைபெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சபம்.

வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெகு விமருசையாக நடைபெற்றது.


நேற்றைய தினம் மாலை நான்கு மணியளவில்  தமிழ்நாடு சிவகங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட கொடிமரமானது ஏற்றப்பட்டு சிவகங்கை மாவட்ட குருமுதல்வர் ஜோஷப் லுத்துராஜ் தலமையில் திருப்பலியானது ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்த்து.


இந்நிலையில் இன்றைய தினம் காலை 7மணிக்கு 

யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாஷம் ஆண்டகை தலமையில் நற்கருனை ஆராதனை திருப்பலியானது ஒப்புக்கொடுப்பட்டுள்ளது.


 இவரோடு இணைந்து காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க, யாழ்.மாவட்ட குரு முதல்வர் ஜோஷப் தாஸ் ஜெபரட்ணம் மற்றும் தமிழ்நாடு சிவகங்கை மாவட்ட குரு முதல்வர் ஆகியோர்களும் திருப்பலி ஒப்புக்கொடுக்கலில் பங்குபற்றினர்.


இதேவேளை இத் திருவிழாவிற்கு இலங்கையில் மற்றும் இந்தியாவில் இருந்து சுமார் 8 ஆயிரத்து 102 யாத்திரிகர்கள் கலந்து கொண்டார்கள்,


குறிப்பாக இம்முறை தென்பகுதியில் இருந்தும் பக்கதர்கள் பங்குபற்றிய  நிலையில் அவர்களுக்கா தமிழ் மொழியில் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியின் சில பகுதிகள் சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.


மேலும் இந்தியா தமிழ் நாட்டில் இருந்து இம்முறை இத் திருவிழாவிற்கு செல்வதற்காக 2103 பக்கத்தர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இதுவரை 1920 பேர் மாத்திரமே வருகை தந்துள்ளனர். இவர்கள் 62 விசைப் படகுகளில் இத் தீவிற்கு வருகை தந்துள்ளனர். 


இவர்களில் 1532 ஆண் பக்தர்களும், 336 பெண் பக்தர்களும், ஆண் குழந்தைகள் 29 மற்றும் பெண் குழந்தைகள் 23 பேர் என 1920 பக்தர்கள் கச்சத்தீவு வருகை தந்துள்ளனர்.


இவ்வாறு கச்சதீவு திருவிழாவிற்கு சென்ற அனைத்து பக்கத்தர்களுக்குமான தேவையான வசதிகள், உணவு, பாதுகாப்பு என்பன தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை கடற்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு