கர்ப்பமாகி ஒரு மணி நேரத்தில் குழந்தை பெற்ற அதிசய பெண்!! -வியப்பில் வைத்தியர்கள்-
இந்தோனேசியாவில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நாட்டின் மேற்கு ஜாவாவில் தாசிக்மலயா பகுதியை சேர்ந்த பெண் ஹெனி நூரேனி (வயது 28) இவருக்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் தான் இவர் தான் கர்ப்பமான ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து அவர் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் வீட்டில் இருந்த போது,
என் உடலில் முதலில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அதன் பின், திடீரென்று, என் வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தேன்.
இதையடுத்து நான் என் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். வயிற்றில் எனக்கு பிடிப்புகள் இருந்தன, இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம், அதன் பின் குழந்தை பெற்றெடுத்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஒன்பது மாதங்களாக தவறாமல் தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டதாகவும், குழந்தை பெற்றெடுப்பதற்கு சற்று முன்பு கூட இரத்தப் போக்கு இருந்ததாக தெரிவித்துள்ளார்.