அமெரிக்காவின் மாகாண ஆளுநருக்கு கொரோனா!!
அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாகாண ஆளுநர் கெவின் ஸ்டிட் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நேற்று புதன்கிழமை இணைய வழி நேரலையில் ஊடகவியலாளர்களுடன் பேசிய ஆளுநர் கெவின் ஸ்டிட் தெரிவித்தார்.
இருப்பினும் தனது உடல் நிலை நன்றாக இருக்கிறது. தன்னிடம் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான எந்த அறிகுறிகளும் இதுவரை இல்லை எனவும் அவர் கூறினார்.