சிங்களத்திற்கு முதலிடம்:போக்குவரத்திலும் முன்னுரிமை?

ஆசிரியர் - Admin
சிங்களத்திற்கு முதலிடம்:போக்குவரத்திலும் முன்னுரிமை?

சிங்களத்திற்கு முன்னுரிமையுடன் கச்சதீவு வருடாந்த உற்சவம் நடந்து முடிந்துள்ளது.போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் இன்மையால் கச்சதீவிலிருந்து திரும்பி செல்வதும் கடுமையான நெருக்கடிகளிற்குள்ளாகியுள்ளது.

கச்சதீவு செல்லும் போதும் அதேபோன்று திரும்பும் போதும் முதலில சிங்கள மக்களைப் படகில் ஏற்றியதன் பின்னர் தான் தமிழ் மக்கள் படகில் ஏற கடற்படை அனுமதித்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

கச்சதீவு ஆலயத்திற்கு செல்லவும் அதே போன்று திரும்பவும் யாத்திரிகர்களிற்கான போதிய படகுச் சேவைகள் இம்முறையும் இருந்திருக்கவில்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்காக செல்லும் யாத்திரிகர்களிற்கு மேற்கொள்ளும் படகுச் சேவையானது நேற்றைய தினம் போதிய அளவில் மேற்கொள்ளாதமையினால் குறித்த ஆலயத்திற்குச் செல்வதற்காக புறப்பட்ட பல யாத்திரிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

குறிப்பாக நேற்றுக் காலை 10 மணிக்கும் முன்பதாகவே முதலில் 1580 யாத்திரிகர்களும் பின்னர் 400 யாத்திரிகர்களும் 20 படகுகளில் பயணித்தனர். எனினும் இதன் பின்பும் பலர் குறிகட்டுவான் இறங்கு துறைக்கு வருகை தந்தவண்ணம் இருந்தனர் இதன் காரணமாக இறங்குதுறையில் நெருக்கடி ஏற்பட்டபோதும் படகு வசதிகள் கிட்டவில்லை.

இதேநேரம் காலை முதல் மாலைவரை கொளுத்தும் வெய்யிலில் தமிழ் மக்கள் காத்திருந்த நிலையில் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பெரும்பான்மை இன யாத்திரிகர்கள் மட்டும் உடனுக்குடன் கடற்படையினரின் படகுகள் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

இதன் காரணமாக மாவட்டச் செயலகம் வடதாரகை மற்றும் குமுதினி படகுகளை இரண்டாம் கட்டச் சேவையில் ஈடுபடுத்தினர் இருப்பினும் யாத்திரிகர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலமையே கானப்பட்டது.
இதே போன்று கச்சதீவிலிருந்து திரும்புகின்ற போதும் நெருக்கடி நிலை தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு