வலி.மேற்கு பிரதேச சபைக்குத் தெரிவாகிய உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் - Admin
வலி.மேற்கு பிரதேச சபைக்குத் தெரிவாகிய உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய அதிபருக்கு அவதூறு பரப்பும் வகையில் இணையத்தளங்களில் செய்திகளை வெளியிட்டு மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளார் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வலி.மேற்கு பிரதேச சபைக்கு தெரிவாகியவர்.

வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் 30 வருடங்களாக கடமையில் இருக்கும் அதிபரின் எதேட்சதிகாரமான செயற்பாட்டால் அந்தப் பாடசாலையைச் சூழவுள்ள கிராமங்கள் கல்வியில் பின்னடைந்துள்ளன என அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

குறிப்பாக, மூளாய் வேரம், முன்கோடை, தொல்புரம், மூளாய் பிள்ளையார் கோயிலடி போன்ற ஏற்கனவே பின்தங்கிய கிராமங்களே இவரால் பாதிக்கப்பட்டுள்ளன என அந்தப் பிரதேச மக்களும் அங்குள்ள சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தெரிவிக்கின்றனர் எனவும் அவர் தனது செய்தியில் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தச் செய்தியை வெளியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் அந்த உறுப்பினருக்கு எதிராக மூளாய் சைவப்பிரகாச வித்தியாலத்தின் சமூகம் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அதிபரை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அந்த அரசியல்வாதி இவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கின்றார் என்றும் பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு