வலிகாமத்தில் உருளைக்கிழங்கு அறுவடை_விவசாயிகள் மும்முரம் VIDEO

ஆசிரியர் - Admin
வலிகாமத்தில் உருளைக்கிழங்கு அறுவடை_விவசாயிகள் மும்முரம் VIDEO

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் உருளைக்கிழங்கு அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது.

  இந்நிலையில் இம்முறை வலிகாமத்தில் சசி வகை உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த வகை உருளைக்கிழங்கில் ஒரு அந்தரிலிருந்து 22 மூடை வரை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளதாகவும அவர்கள் தெரிவிக்கின்றனர்.எனினும், அனோவா வகை உருளைக்கிழங்கு விளைச்சலில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ள போதும் யாழில் பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு அறுவடையை ஏற்கனவே நிறைவு செய்துள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் காலம் தாழ்த்திய இந்தச் செயற்பாடு தொடர்பிலும் அவர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.இவ்வருடம் யாழில் 35 ஏக்கர் நிலப் பரப்பில் உருளைக்கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் ஏழாலை, குப்பிளான், புன்னாலைக்கட்டுவன், ஈவினை, வயாவிளான், சுன்னாகம், இணுவில், அச்செழு, ஊரெழு, உரும்பிராய், கோண்டாவில், கோப்பாய் ஆகிய பகுதிகளில் உருளைக் கிழங்குச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு