யாழ்ப்பாணத்தில் இருந்து கந்தகாடு சென்ற பேருந்து எது..? மண்டையை பிய்க்கும் வடக்கு சுகாதாரதுறையினர் தீவிர தேடுதலில்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் இருந்து கந்தகாடு சென்ற பேருந்து எது..? மண்டையை பிய்க்கும் வடக்கு சுகாதாரதுறையினர் தீவிர தேடுதலில்..!

யாழ்ப்பாணத்தில் இருந்து கந்தகாடு- புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்றுவந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் பயணித்த பேருந்தை அடையாளம் காணும் முயற்சிகளை சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனர். 

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த 226 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த முகாமில் உள்ள உறவுகளைப் பார்வையிட கடந்த 4ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று திரும்பியவர்கள் என்ற அடிப்படையில் 

மூன்று குடும்மங்கள் நேற்று முதல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டவர்களில் இரு குடும்பங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபை பகுமியிலும் ஒரு குடும்பம் சண்டிலிப்பாய் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என 

இனம்கானப்பட்டுள்ளனர். இனம்கானப்பட்ட குடும்பங்கள் கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் ஆலய குறுக்கு வீதியிலும், சுண்டுக்குழியிலும் வசிப்பதோடு மூன்றாவது குடும்பம் மானிப்பாய் பகுதியிலும் வசிக்கின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட மூன்று வீடுகளிற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 14ம் திகதி பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த மூன்று குடும்பங்களும் உறவுகளைப் பார்வையிட்ட 

பின்னர் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பேரூந்தினையும் அதில் பயணித்தவர்களையும் இனம் காணும் முயற்சி நேற்றுமுதல் முடக்கி விடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு