சிங்கள மொழி திருப்பலி :சோரம் போன யாழ்.ஆயர்?

ஆசிரியர் - Admin
சிங்கள மொழி திருப்பலி :சோரம் போன யாழ்.ஆயர்?

இலங்கை கடற்படை வசமுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை திருப்பலி பூஜையுடன் நடைபெறவுள்ளது.

இம்முறை இந்தியாவிலிருந்து 2103 பக்தர்களும் இலங்கையிலிருந்து சுமார் 8ஆயிரம் பேரும் புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ளவருகை தந்துள்ளனர்.

திருவிழா ஏற்பாடுகள் குறித்து யாழ்மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொருவருடமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வந்தாலும் இந்த வருடத்திலிருந்து சனிக்கிழமைகளில் புனித அந்தோனியாரின் திருவிழா கொண்டாடப்படவிருக்கின்றது.

தவக்காலத்திலே வருகின்ற ஞாயிறு தினங்களுக்கு முன்னுரிமைகொடுக்கவேண்டும் என்பதற்காக இந்தவருடத்திலிருந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாளை சனிக்கிழமை இவ்வாண்டுக்கான திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை திருச்சிலுவை பாதை , நற்கருணை ஆராதனை போன்ற வழிபாடுகள் நடைபெற்றது. வழமை போல் யாழ் மறைமாவட்டத்திலிருந்தும் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையின் தென்பகுதியிலிருந்தும் ஏறக்குறைய 10ஆயிரம் யாத்திரிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த விழாவிற்கான சகல பொறுப்பாகவும் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு எமில் போல் அடிகளாரும் , திருவிழாவிற்கான ஏற்பாடுகளை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அனைவரும் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
யாத்திரிகளுக்கான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாளை மற்றும் நாளை மறுதினம் யாத்திரிகளுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .
இந்த வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தள விழா யாழ் மறைமாவட்ட ஆயர் பேரரர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையுடன் இணைந்து காலி மறைமாவட்ட ஆயர் பேரர் திரு பிறேமன் விக்கிரமசிங்க ஆண்டகையும்; கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.
யாழ் மறை மாவட்டத்திலிருந்தும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ஏராளமான குருக்கள் துறவிகள் அருட்சகோதரிகள் இறைமக்களும் இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு