முறையான திட்டமிடல் அற்ற தலைமைத்துவத்தை மக்கள் இருமுறை சிந்திக்காது நிராகரிப்பர்.... நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவம் எமது கட்சிக்கே உரியது...

ஆசிரியர் - Admin
முறையான திட்டமிடல் அற்ற தலைமைத்துவத்தை மக்கள் இருமுறை சிந்திக்காது நிராகரிப்பர்.... நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவம் எமது கட்சிக்கே உரியது...

- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 

சில அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகளையும், வாக்காளர்களையும் விட்டுச் செல்லும் சந்தர்ப்பத்தில், நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைமைத்துவமொன்று தமது கட்சிக்கே இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லுணுகம்வெஹெர பிரதேச சபை மண்டபத்தில் இன்று (2020.07.05) பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவடைந்து தலைமைத்துவமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இலங்கை முழுவதுமுள்ள ஐ.தே.க. உறுப்பினர்கள் மாத்திரமன்றி தேர்தல் வேட்பாளர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.

தமது அரசாங்கங்களின் கீழ் கணக்கு பார்த்து வீடுகளை நிர்மாணிக்காவிடினும், பாரிய வீடமைப்பு திட்டங்கள் பல செயற்படுத்தப்பட்டமையை நினைவுகூர்ந்த பிரதமர், கடந்த அரசாங்கத்தின்போது பத்து வீடுகள் மாத்திரம் நிர்மாணிக்கப்படினும் அவ்வீடுகளை நிர்மாணிக்க செலவிடப்பட்ட பணத்தைவிட அதிக தொகை திறப்பு விழாவிற்கான விளம்பர சுவரொட்டிகளுக்காக செலவிடப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

கலாசார நிதியத்தின் பணம், பாலம் நிர்மாணித்தல் உள்ளிட்ட வேறு செயற்பாடுகளுக்கு பாரியளவில் செலவிடப்பட்டுள்ளதால், சிறு விகாரை அபிவிருத்தி மற்றும் புராதன இடங்கள் அபிவிருத்திக்கென உருவாக்கப்பட்ட அந்த நிதியத்தின் நோக்கம் முற்றாக தடைப்பட்டுள்ளது.

சில விகாரைகளுக்கு பல இலட்சம் ரூபாய்களை தன்னிச்சையாக வழங்கியிருப்பதுடன், மேலும் பணம் வழங்குவதற்கும் உறுதி வழங்கியுள்ளனர்.

வீடமைப்பு திட்டம் என்ற போர்வையில் யானை நடமாட்டமுள்ள இடங்களில் சிறு வீடுகளை நிர்மாணித்து கொடுத்து அந்த வீட்டு உரிமையாளர்களை கடனாளிகளாக்கி உள்ளதாக தெரிவித்த பிரதமர், இவ்வாறான முறையான திட்டமிடல் அற்ற தலைமைத்துவத்தை மக்கள் இருமுறை சிந்திக்காது நிராகரிப்பர் என்றும் மேலும் தெரிவித்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு