இன்று ஆரம்பமான யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது கண்காட்சி

ஆசிரியர் - Admin
இன்று ஆரம்பமான யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது கண்காட்சி

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும், கண்காட்சியும் இன்று கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இதில், பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்கினேஸ்வரன் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரனும் இந்திய ஆயுஸ் அமைச்சின் பிரதிநிதி டாக்டர் எஸ்.செந்திவேல் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும், இந்திய ஆயுஸ் அமைச்சும் இணைந்து நடாத்தும் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும், கண்காட்சியும் இதுவாகும்.

இந்த நிகழ்வுகளுக்காக இந்தியாவில் இருந்து நூறுக்கு மேற்பட்ட சித்த ஆயுள்வேத வைத்தியர்கள் பேராசிரியர்கள் கலந்துகெண்டுள்ளதுடன் கிழக்கு மாகாணங்களில் இருந்தும் ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இக் கண்காட்சியானது இன்றுமுதல் வருகின்ற 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு