சற்றுமுன் வவுனியா புளியங்கும் ஏ-9 வீதியில் வந்த கார் கோர விபத்து!

ஆசிரியர் - Admin
சற்றுமுன் வவுனியா புளியங்கும் ஏ-9 வீதியில் வந்த கார் கோர விபத்து!

புளியங்கும் ஏ-9 வீதியால் வந்த கார் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடந்த குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி வந்த கார் வீதியின் எதிரே சென்ற மாட்டை மோதித் தள்ளியது. விபத்தில் மாடு உயிரிழந்த.

விபத்தில் கார் கடுமையான சேதமடைந்த நிலையில் அதன் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார்.

விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.