யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்தவருக்கு நீதவானின் கடும் உத்தரவு

ஆசிரியர் - Admin
யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்தவருக்கு நீதவானின் கடும் உத்தரவு

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த சந்தேகநபருக்கு ஒன்றரை வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன் நேற்றைய தினம்(21) உத்தரவிட்டுள்ளார்.சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த குற்றத்துக்கே மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கெதிராகச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் குற்றச்சாட்டுப் பத்திரம் முன்வைக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் நீதவான் சி.சதீஸ்தரன் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு  நேற்று புதன்கிழமை நேரில்  சென்று  விசாரணைகளை முன்னெடுத்தார். விசாரணைகளின் நிறைவில் சந்தேகநபருக்கு ஒன்றரை ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான புங்குடுதீவு பதினோராம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரன் ஜெபராசா தயானந்தன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட்-10 ஆம் திகதி முற்படுத்தப்பட்டார்.சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து நழுவி நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்றார். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துரத்திச் சென்றபோதும் சந்தேகநபர் தப்பி ஓடிவிட்டார்.

சந்தேகநபரை பொலிஸார் வலை வீசித் தேடி வந்ததுடன்  அவரைப் பிடிக்கப் பொதுமக்களிடமும் உதவி கோரியிருந்தனர். இந்த நிலையில் கடந்த-06 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு வானில் கொழும்பு சென்றபோது வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு