இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட இராணுவ கவச வாகனங்கள்..! ஐ.நா அமைதிகாக்கும் படைக்கு அனுப்பபடுகிறது..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட இராணுவ கவச வாகனங்கள்..! ஐ.நா அமைதிகாக்கும் படைக்கு அனுப்பபடுகிறது..

இலங்கை இராணுவ பொறியியல் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 9 கவச வாகனங்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் சவேந்திர சில்வா இன்று பத்தரமுல்ல இராணுவ தலமையகத்தில் பார்வையிட்டிருக்கின்றார். 

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படையினரின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டவை மாலிக்கு இலங்கை இராணுவத்தினாரால் கையளிக்கப்பட்டது.ஒன்பது கனரக கவச வாகனங்களையும் கண்காணித்து 

பரிசோதனைக்கு உட்படுத்தும் நிகழ்வு பத்தரமுல்லை இராணுவத்தலைமையகத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம் பெற்றது. இதன்போது ஒன்பது கனரக கவச வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்டது. 

இந்த ஒன்பது வாகனங்களும் பென்லையின் ஏயன்சியின் முகாமையாளர் ரஹிலீன் போரத்திடம் இராணுவத்தளபதியால் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி கூறியதாவது ,

மாலி நாட்டில் சேவையாற்றும் இலங்கை இராணுவத்தினரின் பாவனைக்காக எமது இராணுவத்தினரின் மின்னியல் பொறியியல் பிரிவினரால் இந்த வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு கவச வாகனதயாரிப்பிற்கு 

 10 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவற்றை வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதாயின் ஒரு வாகனத்திற்கு 40 மில்லியன் ரூபாய் வரையில் செலவிடவேண்டியிருக்கும். இந்த வாகனத்தினுள் நான்கு பேர் பயணிக்க முடிவதுடன், 

அமர்ந்து பயணிப்பதற்கு இலகுவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாம் இதனை முதலில் எமது இராணுவத்தினருக்கு வழங்கவுள்ளோம்.இதனை தொடர்ந்து வெளிநாட்டு இராணுவத்தினருக்கு வழங்குவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். 

மாலி நாட்டில் ஆயிரம் மையில்கள் வரை பயணிக்க வேண்டி இருப்பதால் அதற்கு ஏற்ற வகைபயிலும் பல நவீன வசதிகளுடனுமே இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு