மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த அதிபருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டணை..!
15 வயதான பாடசாலை மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த அதிபருக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருக்கின்றது.
இதன்படி அதிபருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், முறைப்பாடு செய்த மாணவருக்கு
ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் வழங்குமாறும், அதனை செலுத்த தவறின் மேலும் 6 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபரின் சேவைக்கு தாக்கம் செலுத்தாமல் இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.2015ம் ஆண்டு மார்ச் மாத காலப்பகுதியில்
எப்பாவல பாடசாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.