ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமா? தளர்த்தப்படாதா? ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல்..!
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதா? இல்லையா? சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்படும். என ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களில் ஒன்றாக காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. முழுநேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும் தற்போது தினமும் நள்ளிரவு 12 மணி
தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அமுலில் காணப்படுகிறது. இந்த நிலையானது தொடர்ந்து நீடிக்குமா என எமது செய்திப்பிரிவு வினவியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவானது
மறு அறிவித்தல் வரை தினமும் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.