வாடகை வீட்டுத்திட்டம்..! கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..
தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியிருப்பவர்களுக்கு வாடகை வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் செயலாளர் பிரியத் பந்து விக்ரம இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களை நடத்தி செல்லும் பகுதிகளில் அதிகமாக வாடகை குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக குறைந்த வருமான கொண்டவர்களுக்கான வீட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்து 5 வருடங்களில் 40 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு
நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார். தொழில் ஈடுபடுபவர்கள் அனைவரும் சம்பளத்திற்கு ஏற்றால்போல் புதிய வீடுகள் பெற்றுக் கொள்வதற்காக
மத்திய மட்டத்திலான வீட்டு திட்டங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீட்டுத் திட்டம் நிர்மாணிப்பதற்கான காணிகளை இலவசமாக வழங்குவதாகவும் தனி அறைகள், 2 அறைகள், 3 அறைகள் என்ற பிரிவில் 7.5 - 15 மில்லியன் ரூபாய் கட்டணத்தில்
வீடுகள் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.