புதுக்குடியிருப்பு தேவிபுரம் வீட்டுக்காணியில் சட்டவிரோத கசிப்பு காச்சியவர் கைது!
புதுக்குடியிருப்பு காவல் துறை பிரிவிற்கு உட்பட்ட தேவிபுரம் வீட்டுக்காணியில் கசிப்பு காச்சப்படுவதாக புதுக்குடியிருப்பு காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து புதுக்கடியிருப்பு குற்றத்தடுப்புகாவல் துறைக்கு நிலைய பொறுப்பதிகாரி I.P-பண்டார தலைமையிலான P.S-ரத்னசிறி 22425, P.S- திசநாயக்க 40852 ,P.S-முத்துநாயக்க 60600,P.C- கமகே 48759,P.C- ரத்நாயக்க 77184 ,ஆகியோர் கொண்ட குழுவினர் குறித்த கிராமத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்ட்ட வேளை தேவிபுரம் பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக கசிப்பு காச்சிவருகின்றமை தெரியவந்துள்ளது.
இன்னிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு சென்ற காவல் துறை குழுவினர் வீட்டு காணிக்குள் தென்னை ஓலைகள் கொண்டு சுற்றிவர மறைப்பு கட்டப்பட்டு அந்த இடத்தில் சட்டவிரோத கசிப்பு காச்சி வந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளார்கள்.
இதன்போது 20 லீற்றர் கசிப்பும், 180 லீற்றர் கோடாவும் மற்றும் கசிப்பு காச்ச பயன்படுத்தப்படும் பானைகள்,வயர்கள் பெரல்கள் என்பன காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவல் துறையினர் தெரிவித்துள்னர்.
.