நாட்டிற்கு பாதகமானதும் மக்களுக்கு எதிரானதுமான எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட ஆதரவளிக்க மாட்டோம் : அங்கஜன்!

ஆசிரியர் - Admin
நாட்டிற்கு பாதகமானதும் மக்களுக்கு எதிரானதுமான எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட ஆதரவளிக்க மாட்டோம் : அங்கஜன்!

மக்களுக்கு எதிரான எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவதற்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என முன்னாள் விவசாயத்துறை பிரதியமைச்சரும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கோகுலம் பண்ணையை,  முன்னாள் விவசாயத்துறை பிரதியமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் ராமநாதன் இன்றையதினம் திறந்து வைத்தார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

“எம்.சி.சி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கம் பின்வாங்குவதாக தொிவித்திருந்தது. அதன் அப்படையில் நாட்டிற்கு பாதகமானதும் மக்களுக்கு எதிரானதுமான எந்த ஒப்பந்தத்திலும் இந்த அரசாங்கம் ஈடுபடாது.

அவ்வாறான எந்த உடன்படிக்கைகளையும் அரசாங்கம் கைச்சாத்திடாது. அதற்கு இந்த அரசாங்கமும் உடன்படாது. நாங்களும் ஆதரவளிக்க மாட்டோம்” என முன்னாள் விவசாயத்துறை பிரதியமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் ராமநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Radio