புறக்கணிக்கப்படும் சுகாதார ஆலோசனைகள்! - கொரோனா பரவும் ஆபத்து.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து நாட்டில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவை மற்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வரும் மக்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மிகவும் வருத்தத்துடன் கருத்து வெளியிட்டவர், பலர் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய செயற்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காமல் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
விசேடமாக பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் போது ஒரு ஆசனத்தில் ஒரு பயணி பயணிப்பதுடன், முகக் கவசம் அணிவது மிகவும் முக்கியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான இடங்களில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாமல் இருப்பது ஆபத்தாக மாறும். இவ்வாறான பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் காலப்பகுதியில் சுகாதார சட்டங்களை முழுமையாக செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.