SuperTopAds

ஜனாதிபதி கோட்டபாய ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி..! அவர் தமிழர்களுக்கு தீர்வு தருவார் என நான் நினைக்கவில்லை..

ஆசிரியர் - Editor I

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை எனக்கு தொியும். அவர் ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி. அவர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றுவார் என நான் நினைக்கவில்லை. அவர் தரமாட்டார் என்பதற்காக நாங்கள் பேசாமலும் இருக்க முடியாது. இருக்கமாட்டோம். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஜனாதிபதி கோட்டபாயவுடன் தீர்வு கூறித்து பேச கூட்டமைப்பு எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பாகவும், 

அதனால் பயனுண்டா எனவும் ஊடகவியலாளர்கள் எ ழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை எனக்கு தொியும். அவர் ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி, 

அவர் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை வழங்குவார் என நான் நினைக்கவில்லை. ஆனால் அதற்காக நாங்கள் அமைதியாக இருக் க முடியாது. சர்வதேச மட்டத்திலும் உள்ளுரிலும் பேசவேண்டும். அழுத்தங்களை கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையே இல்லை என்றாகிவிடும். கடந்த 70 வருடங்களாக அகிம்சை வழியிலும், 

ஆயுதங்களாலும் எமது பக்க நியாயங் களை பேசி எமக்கானதை கேட்டதாலேயே அது இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. எனவே பேசவேண்டியது கட்டாயம். அது கோட்டபாயவாக இருந்தால் என்ன மற்றவர்களாக இருந்தால் என்ன நாம் பேசுவோம்.