நயினை நாகபூசனி அம்மன் ஆலய வளாகத்தில் பாதணிகளுடன் நடமாடியது யார்..? உடனடி விசாரணைக்கு பிரதமர் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
நயினை நாகபூசனி அம்மன் ஆலய வளாகத்தில் பாதணிகளுடன் நடமாடியது யார்..? உடனடி விசாரணைக்கு பிரதமர் உத்தரவு..

ஈழத்தில் வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சப தொடக்க நாளில் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் 

பாதணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் நடமாடிய பொலிஸார், படையினர் குறித்து விசாரணை நடத்த பிரமர் மஹிந்த ராஜபக்ச வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை தொலைபேசி ஊடாக வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறித்த சம்பவம் தொடர்பாக 

உடனடியாக விசாரணை நடத்துமாறும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட்டார். 

இதனையடுத்து, நயினாதீவுப் பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தப்பட்ட படையினரை அழைத்து இன்று காலை 

விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நடைபெற்ற சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த படையினர், தாம் வேண்டும் என்றே இவ்வாறு செய்யவில்லை எனவும், 

இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது எனவும் தெரிவித்ததாக அறியவந்திருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு