கொரோனாவுக்கு 19 புனைபெயர்கள்!! -சீனாவை மையப்படுத்தி டிரம்ப் சூட்டினார்-
சீனை மையப்படுத்தி கொரோனாவை வைரசுக்கு 19 பெயர்களை சூட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆவேச பேச்சுக்களை பேசி வருகின்றார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், நேற்று முன்தினம் ஓக்லஹோமா மாகாணத்தில் துல்சா நகரில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்று பேசினார்.
அங்கு பேசிய அவர் கொரோனா வைரஸ் பற்றி பேச தவறவில்லை. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் வந்தது என்பதற்காக அவர் சீனாவில் கைகளையும், கால்களையும் மட்டுமே பயன்படுத்தி சண்டையிடும் தற்காப்பு கலையான குங்புவை நினைவுபடுத்தும் வகையில், கொரோனா வைரசை குங்புளூ என்ற பெயரால் அழைத்தார். கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் சீனாதான் என அவர் குற்றம் சுமத்தினார்.
தொடர்ந்து அவர் பேசியபோது கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று ஒரு நோய்தான். இதை இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் வேறு எந்த நோயையும்விட பல்வேறு பெயர்களால் அழைக்க முடியும்.
நான் குங் புளூ என்று அழைப்பேன். அதன் 19 வெவ்வேறு பதிப்புகளையும், வெவ்வேறு பெயரிட்டு அழைப்பேன். பலர் இதை வைரஸ் என்று அழைக்கிறார்கள். அது வைரஸ்தான். எங்களிடம் 19 அல்லது 20 வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரிசோதனையை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை கேட்கிறேன். ஏனென்றால், அதிகமாக பரிசோதனைகளை செய்வதால் இன்னும் கூடுதலாக நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். கொரோனா பரிசோதனை என்பது இரண்டு பக்கமும் கூர்மையான வாள்.
அதன் மோசமான பகுதி பரிசோதனைதான். நீங்கள் எந்தளவுக்கு பரிசோதனைகளை செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு கூடுதலாக தொற்றுபாதித்தவர்களை கண்டறிய முடியும். எனவேதான் பரிசோதனைகளை குறைத்துக்கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அவர்கள் பரிசோதனைக்கு மேல் பரிசோதனை என்று செய்து கொண்டே இருக்கிறார்கள் என்றார்.