SuperTopAds

2020ம் ஆண்டின் 1வது சூரிய கிரகணம் இன்று..! 10.24 மணிக்கு யாழ்ப்பாணம், 10.34 மணிக்கு மாத்தறை நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்கலாம்..

ஆசிரியர் - Editor I
2020ம் ஆண்டின் 1வது சூரிய கிரகணம் இன்று..! 10.24 மணிக்கு யாழ்ப்பாணம், 10.34 மணிக்கு மாத்தறை நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்கலாம்..

2020ம் ஆண்டின் 1வது சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ள நிலையில், மக்கள் வெற்றுக் கண்களால் சூரிய கிரகணத்தை அவதானிக்க வேண்டாம். என இலங்கை கோள் மண்டலம் அறிவித்திருக்கின்றது. 

இன்று காலை 9.15 மணி முதல் மணி வரை 6 மணித்தியாலங்களுக்கு சூரிய கிரகணம் நீடிக்கவுள்ளது.இன்று காலை 10.20 மணியளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். 

இதேநேரம், காலை 10.24 மணியளவில் யாழ்ப்பாணத்திலும் காலை 10.34 மணியளவில் மாத்தறையிலும் அரைச் சூரியக்கிரகணத்தை அவதானிக்க முடியும். இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.