கொழும்பு பல்கலைகழகத்தின் சாதனை..! கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் தொலைபேசி App கண்டுபிடிப்பு..!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தொலைபேசி App (செயலி) ஒன்று கொழும்பு பல்கலைகழக வானியல் பிரிவு மாணவர்களால் உருவாக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்.
இந்த கையடக்க App பயன்படுத்தி கொரோனா ஆபத்துக்கள் உள்ள நபர்களை தூரத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.மேலும் மக்களுக்காக விமான நிலையத்தை திறந்த பின்னர் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்கும்
பல விடயங்களை மேற்கொள்வதற்கும் இந்த App உதவுவதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இந்த App யை ஏனைய நாடுகளுக்கு வழங்குவதற்காக உலக சுகாதார அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.