மத்திய கிழக்கில் 23 இலங்கையர்கள் கொரோனாவுக்குப் பலி!
கடந்த மூன்று மாதங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கைப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருப்பதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் அதிகபட்சமாக 8 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் டுபாயிலும், ஒருவர் அபுதாபியிலும் மரணமடைந்துள்ளனர். மேலும், குவைத்தில் 7 பேரும், சவூதி அரேபியாவில் 6 பேரும், ஓமானில் 2 பேரும் கொரோனாவுக்குப் பலியாகியிருப்பதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும், இவர்களில் எத்தனை பேர் வீட்டுப் பணிப்பெண்கள் என்பது குறித்த தகவல் இன்னமும் தெரியவில்லை என்றும், தமக்குக் கிடைத்துள்ள அறிக்கையில் பாலினம் குறிப்பிடப்படவில்லை என்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.