SuperTopAds

கூட்டுறவு வங்கிகள் ஊடாக 4 வீத வட்டியில் சுய தொழிலுக்கான கடன்..!

ஆசிரியர் - Editor I
கூட்டுறவு வங்கிகள் ஊடாக 4 வீத வட்டியில் சுய தொழிலுக்கான கடன்..!

நாடு முழுவதும் உள்ள 6 ஆயிரம் கூட்டுறவு வங்கிகள் ஊடாக 4 வீத வட்டியில் சுய தொழில் ஊக்குவிப்பு கடன் வழங்க அரசு தீர்மானித்துள்ளது. 

இதற்காக தகுதியான பளனாளர்க​ளைத் தெரிவு செய்யுமாறு கூட்டுறவு ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு 

மற்றும் உள்ளக வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார்.கூட்டுறவு வங்கிகளில் காணப்படும் வைப்பீடுகள் மற்றும் நிதிய பணத்தை பயன்படுத்தி 

இந்த கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.நாடளாவிய ரீதியிலுள்ள 6000 கூட்டுறவு வங்கிகளூடாக இந்த கடன் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.