மின் கட்டணம் செலுத்துவது எப்படி..? மின்சாரசபை விளக்கம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின் துண்டிக்கப்படாது..
இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டண பட்டியலே சரியானது என கூறியிருக்கும் மின்சாரசபை, கடந்த பெப்ரவரி மாத மின் கட்டண பட்டியலில் உள்ள தொகையை காட்டிலும் அதிக தொகை இருப்பின் அதனை தவணை அடிப்படையில் செலுத்தலாம் என அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத்தை மேற்கோள்காட்டி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த நடவடிக்கை எடுத்தாலும் எந்தவொரு வீட்டிலும்
மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என தலைவர் தெரிவித்துள்ளார்.