SuperTopAds

சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டணை..! நீதிமன்றம் தீர்ப்பு..

ஆசிரியர் - Editor I
சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டணை..! நீதிமன்றம் தீர்ப்பு..

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு சென்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டணை விதித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

3.6 கிராம் ஹெரோயினை சூட்சுமமான முறையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றமை மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் இந்த பெண்ணுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மாளிகாகந்த நீதவானால் இந்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டமையால், இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.