இந்தியாவுடன் யுத்தம் வேண்டாம்!! -பேச்சுவார்த்தைக்கு வருமாறு சீனா அழைப்பு-
இந்தியாவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை தெரிவித்துள்ள சீனா, முரண்பாட்டை முடித்துக் கொள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென மோதல் ஏற்பட்டது.
சீன இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற சீன இராணுவத்தின் மீது இந்திய இராணுவத்தினர் பதில் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல்களில் 43 சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை எனக்கூறியுள்ள சீனா, பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியன், “தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. நடந்ததில் எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளது.
இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை. எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.