SuperTopAds

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிப்பு!! -இறப்பு விகிதம் குறைவு-

ஆசிரியர் - Editor III
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிப்பு!! -இறப்பு விகிதம் குறைவு-

அமெரிக்காவில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகின்றனர். தற்போது இறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 20,680 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால்  அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அங்கு  தொற்றால் 21லட்சத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கபட்டு உள்ளன. 116,114 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு நாளும் சுமார் 20,000 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.

ஓக்லஹோமாவில் நிலைமை இதுதான்,ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பிரச்சார பேரணி நடத்த  திட்டமிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அபாயத்தை அதிகரிக்கவேண்டாம் என்று துல்சா நகரத்தின் வேண்டுகோளை அவர் நிராகரித்தார், 

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 24 மணி நேரத்தில் 400 க்கும் குறைவான கொரோனா வைரஸ் இறப்புகளை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. திங்கட்கிழ்மை அமெரிக்காவில் கொரோனா இறப்புகள் 382 ஆக இருந்தது. இன்று செவ்வாய்க்கிழமை 385 ஆக உள்ளது.