43 இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் இலங்கையில் இயங்கு நிலையில் உள்ளன..! ஈஸ்டர் விசாரணை குழுவை அதிரவைத்த ஞானசார தேரர்..
இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் இயங்குவதாக பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த அமைப்புக்கள் 4 பிரதான தரப்புகளாக பிரிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தப்லிக் ஜமாத் அடிப்படைவாதம்,
வஹ்ப் வாதம், சலபி அடிப்படைவாதம் மற்றும் ஜமாதே இஸ்லாம் என்ற இக்வான் முஸ்லிமாக பிரிந்துள்ளதாக ஞானசார தேரர்
ஆணைக்குழு முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளார்.சஹ்ரான் போன்றோர் உருவானமை மற்றும் ஆயுதம் ஏந்தியமை இந்த அமைப்புக்களில்
கடுமையான அடிப்படைவாதம் கொண்ட இக்வான் என்ற முஸ்லிம் அமைப்பால் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின் உலமா சபையின் தலைவர்கள்
இந்த பிரதான அடிப்படைவாதத்தை பின்பற்றுவதாகவும் அது ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கைதா போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் பின்பற்றும்
அடிப்படைவாதத்திற்கு சமமானது என அவர் ஆணைக்குழுவின் முன் சுட்டிக்காட்டியுள்ளார். வஹ்ப் வாதத்தை உள்ளடக்கிய கிதாபுத் தவுஹித்
என்ற நூல் தற்போது தெற்காசியா, ஐரோப்பியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சுமார் 20 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கையினுள்
குறித்த நூல் தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும், தக்வியத் உல் ஈமாத் என்ற அடிப்படைவாதத்தை கற்பித்தல் உள்ளிட்ட நூல் நாட்டில்
பெரிய பள்ளிவாசல்களிலும் விற்பனை செய்யப்படுவதாக ஞானசார தேரர் ஆணைக்குழுவில் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதான அடிப்படைவாத்தை கொண்டுள்ளவர்களில் இக்வான் முஸ்லிம்கள் யார் என இதன்போது ஆணைக்குழு அவரிடம் வினவியுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள அவர், எகிப்தில் யுசப் அல் சர்தாரி என்ற கடும் அடிப்படைவாத்தை கொண்டுள்ள தலைவரை மையப்படுத்தி செயற்படும்
இந்த இஸ்லாம் அடிப்படைவாத்தை கொண்டுள்ளவர்களினால் பேருவளையில் அமைந்துள்ள ஜமியா நலிமியா என்ற பெயரில்
கல்வி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி யுசப் அல் சர்தாரி என்ற அந்த தலைவர்
நாட்டில் 3 பேரை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரஹூப் ஹக்கிமின் உறவினரான
மத்திய மாகாணத்தின் முன்னாள் உறுப்பினர் நைமுல்லா, தற்போது கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் பணிபுரியும் இனாமுல்லா
மற்றும் இலங்கை முஸ்லிம் சபையின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோரையே அந்த தலைவர் சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்ட கலகொட அத்தே ஞானசார தேரர்
அவர்கள் அதன்போது எடுத்துக்கொண்ட படங்களை ஆணைக்குழுவில் ஒப்படைத்துள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் இனாமுல்லா என்ற நபர்,
சூரா சபை என்ற அரபி நாடுகளில் செயற்படும் மன்னர்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பொன்றை ஸ்தாபித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,
அதனை அமைத்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து எடுத்துக்கொண்ட படத்தையும் ஆணைக்குழுவில் கையளித்துள்ளார்.
அத்துடன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்ற அமைப்பு, 2015 ஆம் ஆண்டு நல்லாட்சியை உருவாக்குவதற்கு செயற்பட்டதாகவும் அதன் ஊடாகவே
பயங்கரவாத தாக்குதலுக்காக விரைவாக வழிவகுத்தாகவும் கலகொட அத்தே ஞானசார தேரர் இதன்போது ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய 9 ஆம் தரம், 12 ஆம் தரம் மற்றும் 13 ஆம் தரம் இஸ்லாம் புத்தகங்களில் எகிப்தில் யுசப் அல் சர்தாரி என்ற கடும் அடிப்படைவாத்தை கொண்டுள்ள தலைவர்
தொடர்பிலான கற்பித்தல் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்
கலகொட அத்தே ஞானசார தேரர் வெளிப்படுத்தியுள்ளார்.